Ramanathapuram

News July 31, 2024

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சருமான ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (1/2)

image

சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (2/2)

image

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படும். குறிப்பாக பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?

News July 31, 2024

ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜூலை 31) பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 2ஆம் தேதி அன்று பிற்பகல் 3:30 மணியளவில் மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

தஞ்சாவூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

image

முதுகுளத்தூரில் 15 வயது சிறுமியுடன் வாலிபர் மாயமானது தொடர்பாக முதுகுளத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு கோர்ட்டில் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் இளவரசு ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கோபிநாத் இன்ஸ்பெக்டர் இளவரசுவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இவர் தஞ்சாவூர் அம்மாபட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

News July 30, 2024

தமிழ்புதல்வன் திட்டம் குறித்து கலெக்டர் ஆலோசனை

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தமிழ்புதல்வன் திட்டம் துவங்கவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வி துறை, வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 30, 2024

போலீஸ் விசாரணையில் திமுக நிர்வாகிகள்?

image

ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராஹிம் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடன் தொடர்பில் உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 30, 2024

திமுகாவில் இருந்து சையது இப்ராகிம் அதிரடியாக நீக்கம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம், திமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடந்து செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியுடன் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

எலிகளின் கூடாரமாகும் அம்மா உணவகம்

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.இங்கு ஏழை எளிய மக்கள் குறைவான விலையில் சாப்பிட அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. பராமரிப்பில்லாததால் அம்மா உணவகம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தை சுற்றியுள்ள கழிவு நீரால் எலிகளின் கூடாரமாக உணவகம் மாறியுள்ளது.

error: Content is protected !!