India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் மீனவர் படகினை இலங்கை கடற்படையினர் தங்கள் ரோந்து படகின் மூலம் மோதி மூழ்கடித்தனர். இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு மீனவரை காணவில்லை. இதனால் மீனவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார் கோவில் ஊரகப் பகுதிகளில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாணியவல்லம், நயினார் கோவில், தாளையடி கோட்டை, ராதாபுலி, கீழக்காவனூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இதில் 14 துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வு கண்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் சிலர் மாயமாகினர். இந்நிலையில், அதில் மீனவர் மலைசாமி உயிரிழந்துள்ளார். சக மீனவர்களான மூக்கையா, முத்து, முனியாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியின் இருந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியுள்ளது. இதில் படகு மூழ்கியதில் 4 மீனவர்கள் மாயமாகினர். அவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.
1910 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரத்தின் முதல் கலெக்டராக இருந்தவர் ஜே.எப்.ப்ரைண்ட். பிரித்தானியர்கள் காலத்தில் இம்மாவட்டம் ‘ராம்நாடு’ என அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ் பெயராகிய ‘ராமநாதபுரம்’ என்றானது. ராம்நாட்டிற்கு ‘முகவை’ என்ற பெயரும் உண்டு. வைகையின் முகம் என்பது இதன் பொருள். ‘ராம்நாடு’ ‘ராமநாதபுரம்’ ‘முகவை’ இதில் உங்களுக்கு பிடித்த பெயர் எது?
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தாலுகா பாம்பன் ஊராட்சி மன்றத்தால் வரிவசூல் செய்யப்பட்டு வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 28ஆம் தேதியன்று கூட சந்தை நடைபெறும் பகுதியில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். எனவே சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பொதுமக்கள் சார்பாக நேற்று பாம்பன் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி இன்று 31/7/2024 பணி ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதல் வழங்கி பாராட்டினார்.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன், திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் கமலக்கண்ணன் என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.