Ramanathapuram

News August 4, 2024

ராமேஸ்வரத்தில் தரிசன அனுமதியில் நாளை மாற்றம்

image

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று(ஆக.4) கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக பகல் 1 மணி நடை சாத்தப்படும் நிலையில் இன்று சாத்தப்படாமல் பகல் முழுவதும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கே நடை சாத்தப்படும். நாளை(ஆக.5)அம்பாள் மேலத்தெருவில் எழுந்தருளுவதால் மாலை 4 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்தமாட அனுமதி இல்லை.

News August 3, 2024

ராமநாதபுரத்தில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ராமநாதபுரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 3, 2024

ராமேஸ்வரத்தில் போராட்டம் அறிவித்த எடப்பாடி பழனிசாமி

image

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமல் உள்ள பாஜக அரசு மற்றும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் ஆகஸ்ட் 6 தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News August 3, 2024

மீனவரின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் கடலில் முழங்கினர். இதில் உயிரிழந்த இராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று(ஆக.03) அதிகாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

News August 3, 2024

ராமநாதபுரத்தில் 5 நாட்கள் ரயில்கள் ரத்து

image

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து காலை 11 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மற்றும் மதுரையில் இருந்து மதியம் 12:30 க்கு ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 5, 6, 8, 9, 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 2, 2024

மீனவர்களின் குறைகள் தீர்க்கும் கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.2) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைகள் தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகளும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மீனவர்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

News August 2, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

News August 2, 2024

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக கூட்ட அரங்கில் அரசுத்துறை ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.14ல் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் & ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகளை முன் மனுக்களாக ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு ஆட்சியர், ராமநாதபுரம் என முகவரியிட்டு ஆக.9க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

இலங்கை போலீசார் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ் பிரதீப்குமார் பண்டாரா(34) கைதானார். திருச்சி முகாமில் தங்கியுள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிபதி குமரகுரு வழக்கினை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News August 1, 2024

192 பாட்டில்கள் பறிமுதல்

image

தேவிபட்டினம் அருகே முடிவீரன்பட்டினம் சாலையில் ராமநாதபுரம் நகர் நெடுஞ்சாலை ரோந்து, தனிப்பிரிவு போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதித்ததில் அதில் புதுச்சேரி மாநில மதுபானம் 192 பாட்டில்கள் இருந்தன. இதனை காரில் கடத்தி வந்த ஆக்கிடாவலசை பார்த்திபன், ஆண்டித்தேவன்வலசை துரைராஜ் ஆகியோர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!