Ramanathapuram

News August 5, 2024

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

image

ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி முதல் ஊமை உடையான்மடை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்ததால் புதியதாக சாலை அமைக்கக்கோரிய மனு மீதான விசாரணை இன்று (ஆக.05) மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்றபோது, இலவசம் வழங்க அரசிடம் போதிய நிதி உள்ளது. ஆனால் சாலைகள் அமைக்க அரசிடம் நிதி இல்லையா என கேள்வி எழுப்பி ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யக்கோரி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

News August 5, 2024

ராமநாதபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

image

பார்த்திபனூரில் நாளை (ஆக.06) காலை 9.30 மணியளவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் பொது சுகாதாரத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைக்கின்றனர்.

News August 5, 2024

ராமேஸ்வரம் பள்ளியில் அக்னிபாத் விழிப்புணர்வு கூட்டம்

image

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று இந்திய பாதுகாப்பு படையில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் சேர்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் கணேசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். சென்னை தாம்பரம் இந்தியன் விமானப்படை அலுவலர் சார்ஜன்ட் கணிக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News August 5, 2024

1,290 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

image

மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் தென் கடற்கரை அருகே மன்சூர் அலி என்பவரது வீட்டில் தலா 30 கிலோ வீதம் 43 மூட்டைகளில் இருந்த 1,290 கிலோ மஞ்சள் மூட்டைகளை தனிப்பிரிவு போலீஸார் இன்று காலை கைப்பற்றினர். இந்த மஞ்சள் மூட்டைகளை படகு மூலம் கடத்த மரைக்காயபட்டினம் முஹமது மைதீன் என்பவர்பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 4, 2024

ராமநாதபுரம்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எஸ்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News August 4, 2024

ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

தமிழ் புலிகள் சார்பாக நூல் வெளியீட்டு விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் புலிகள் கட்சியின் எழுத்தாளர் தோழர் தமிழ்வாணன் எழுதிய “ஆதித்தமிழ் நிலமும் அருந்ததியர் வரலாறும்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ் புலி கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் இந்நூலை வெளியிட்டார். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் கலந்துகொண்டு சனாதானத்தை ஒழித்த இஸ்லாம் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

News August 4, 2024

அண்ணாமலை நாளை டெல்லி பயணம்

image

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை(ஆக.5) டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்க உள்ளார். அதில் ராமநாதபுரம், புதுகை பகுதி மீனவர்களுடன் மத்திய அமைச்சர் சந்திகவுள்ளதாகவும், அதில் தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

News August 4, 2024

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடல், திருவிழா, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல், சண்டை என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 398982 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!