India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மின்பாதை பராமரிப்புப் பணி இன்று (மே 17) நடைபெற உள்ளது. இதனால் தீட்சிதர் கொல்லை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிர்புறம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி நேற்று அறிவித்துள்ளார்.
நாளை (மே 17) முதல் கடலில் காற்று வேகம் மணிக்கு 40 முதல் 45 கிமீ, அதிகபட்சம் 55 கிமீ வரை வீசக்கூடும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம். படகு வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நகராட்சி பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறையினர் இணைந்து முக்கிய இடங்களில் வெப்ப அலை முன்னேற்பாடு நடவடிக்கையாக புதிய, பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் தினமும் 20 லிட்டர் வீதம் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்குகின்றனர். இதனை பருகி மக்கள் பயன்பெற நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே கருமொழிக்கு வளர்ச்சி பணியை பார்வையிட கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று காரில் சென்றார். இதை அறிந்த ஆதியாகுடி கிராம மக்கள், அவரது காரை வழிமறித்து தங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கண்மாய் உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கண்மாயை நேரில் வந்து பார்க்க வேண்டும் என கலெக்டரை கண்மாய்க்கு அழைத்துச் சென்றனர். இதனை பார்வையிட்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்யத் துவங்கியது. இதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் விலக்கு, ஏழு கடை வீதி, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம், கமுதி ஆயுதப்படைகளுக்குள் டூவிலரில் செல்லும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் வழங்கி ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து கால் செய்யப்படுவார்கள். அதே போன்று சட்டம்- ஒழுங்கு போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவும் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
கமுதி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பார்த்திபனூர், அபிராமம், முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் இன்று (மே 16) மின்தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வானிலை திடீர் மாற்றம் காரணமாக மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.