India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தனக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். இதன் பிறகு தனக்கு லாபமாக வந்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார் ரூ.95,000 பணத்தை மீட்டு உரியவரிடம் எஸ்.பி. முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிமாறுதல் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.08) உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய 48 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களை கடந்த ஜூலை 1ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.08) பாம்பன் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய டிஐஜியாக டாக்டர் அபிநவ் குமார் ஐபிஎஸ் இன்று (ஆக.07) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராம்நாடு மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 10.30 மணி அளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இருந்ததால் கோபமடைந்த அமைச்சர் ஜெயலலிதா தான் உங்கள் முதலமைச்சரா என கேள்வி எழுப்பி, தலைமை மருத்துவர் முத்தரசனை பணியிடமாற்றத்துக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.