India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கமுதி பகுதியில் 12 செ.மீட்டரும், பாம்பன், மண்டபம், கடலாடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொண்டி திருவாடானை பகுதியில் உள்ள கிராமங்களில் நான்கு சக்கர வாகனங்களில் பாலாமணி, செந்தூரம் வகை மாம்பழங்கள் ஒலிபெருக்கி மூலம் கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நத்தம், மதுரை பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள மாம்பழம் ஒன்றரை கிலோ 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கமுதி 124.40 மிமீ, முதுகுளத்தூர் 48 மிமீ, மண்டபம் 14, பாம்பன் 13.90, கடலாடி 13, ராமேஸ்வரம் 9, தங்கச்சிமடம் 8.60, பரமக்குடி 5.90, வாலிநோக்கம் 2.60,
ராமநாதபுரம் 2 மிமீ மழை பெய்துள்ளது.
தொண்டி அருகே செங்காளன் வயல் சவேரியார் பட்டினம் கிராமத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மறையுறை நிகழ்த்தப்பட்டது. ஆந்திர மாநில ஏசு சபை அருட்தந்தை அருள் ஜோ, ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டு ஜெபம் செய்து வழிபட்டனர். அதனைதொடர்ந்து தூய பிரான்சிஸ் சவேரியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது.
விருதுநகர், இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி (26). ராமநாதபுரத்தில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உடன் வேலை பார்த்த மானாமதுரை லட்சுமி (50)க்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த லட்சுமியின் மகன்கள் வல்லரசு, ராஜபாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் பெரியசாமியை ராமநாதபுரத்தில் அரிவாளால் வெட்டினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் புகாரின்படி போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம், பரமக்குடியில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய தினம் வைகாசி அட்சய முகூர்த்தம் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், சந்தை கடை, ஆர்ச் போன்ற பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்தமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேந்தோணி, அரியனேந்தல், சத்திரக்குடி, மஞ்சுர் போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.