India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாடானை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மே 23ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனால் திருவாடானை, தொண்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
திருவாடானை தாலுகா டி. நாகனி ஊராட்சி ஆதியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பெரியக்காள். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
திருவாடானை தாலுகாவில் தினையத்தூர், எம்.ஆர். பட்டினம் உள்பட 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொண்டி, திருவாடானை
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்புதாளை, திணைக்காத்தான் வயல் அரசு உயர்நிலைப் பள்ளி என 19 அரசு பள்ளிகளுக்கு ரூ 2.98 லட்சம் மதிப்பில் 26 ஸ்மார்ட் போர்டுகளை ஓ.என்.சி.சி நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் வழங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிக மழை பெய்தது. இதில்அமரன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் இன்று அதிகாலை மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக அப்போது யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவாடானை வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.
குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று கடல் அலை 0.5 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கடற்கரையோரம் பேரலைகள் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்றிரவு அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக 5 மாதத்தில் 10 வழக்கு பதிந்து, 6 உயரதிகாரிகள், 7 அதிகாரிகள், 3 புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மக்கள் லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை dsprmddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். 04567-230 036, 9498215697, 9498652169, 9498188390, 9498652166, 9600082798, 9498652167 ஆகிய எண்களிலும் புகாரளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரின் நெருக்கடி மிகுந்த கேணிக்கரை சாலையில் சில தினங்களாக பாதாள சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. துர்நாற்றம் வீசியதால் நோய் பரவும் அபாயத்தால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் நேற்று செய்தி வெளியிட்ட 2 மணி நேரத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய பட்ட போக்சோ வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் ஆரம்பமாகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி கோபிநாத் விசாரணைக்கு சாட்சி அளிக்க வராத இன்ஸ்பெக்டர் ராதாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொண்டியில் 10 செ.மீட்டரும், தீர்த்தாண்டதானம் பகுதியில் 8 செ.மீட்டரும், வட்டானம் பகுதியில் 7 செ.மீட்டரும், திருவாடானை பகுதியில் 4 செ.மீட்டரும், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Sorry, no posts matched your criteria.