India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடியில் செப்.11 அன்று சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான நேற்று(ஆக.,15) விதியை மீறி விடுமுறை அளிக்காத, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 26 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்தில் யூரியா 5140, டி.ஏ.பி. 1220, பொட்டாஷ் 112, காம்ப்ளக்ஸ் 1699 டன் என மொத்தம் 8171 டன் உரங்கள் இருப்பு உள்ளது. விவசாயிகள் இத்தகைய உரங்களை வாங்கி பயன்பெறலாம். போலியான உரங்களை விற்பனை செய்வது தெரிந்தால் உர ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று எஸ்பி சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எஸ்பியிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்ற எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் வரும் 20ஆம் தேதி மாதாந்திர மின் நிறுத்தம் மற்றும்பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய இருப்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 மற்றும் 21 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்டஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.14) அறிவித்துள்ளார்.
செகந்திராபாதில் இருந்து இராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில், தற்போது பயணிகளின் வசதிக்காக வரும் 21ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற (ஆக 15) சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? வின் டிவியின் நிறுவனரான இவர் யாதவ மகா சபையின் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவன தலைவராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ராமராதபுரம், திருவாடணை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,95,788 ஓட்டுகள் பெற்றார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள், 89 பேரின் வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2019ல் ரூ.91 லட்சம் மோசடி நடைபெற்றது. இதில் கோயில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து 2000 பக்க குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை அடுத்த மாதம் 13க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sorry, no posts matched your criteria.