India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஆக.25 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்ய இருப்பதால், தகுதிவாய்ந்த நபர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. ராமநாதபுரம் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 110 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு நாளை (ஆக. 20) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். காற்றின் வேகம் அதிகம் என்பதால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, உயிர் காக்கும் சட்டை, படகு பதிவு, காப்பீடு சான்றுகள், மீன்பிடி உரிமம், மீன்பிடி அனுமதி சீட்டு, மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியற்றை எடுத்துச்செல்லுமாறு மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் நாளை(ஆக.,20) மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, நீர் செல்லும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(ஆக.,20 ), நாளை மறுநாள்(ஆக.,21) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 21வது மிஸ்டர் ராமநாதபுரம் ஆணழகன் போட்டி நேற்று(ஆக.,18) நடைபெற்றது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ‘தினேஷ் குமார்’ தலைமை வகித்தார். முதல் முறையாக 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
நடப்பு சம்பா பருவத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 5,140 மெ.டன், டிஏபி 1,220 மெ.டன், பொட்டாஷ் 112 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,699 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 99 மெ.டன் என 8,170 மெ.டன் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காரைக்குடி மெயின் ரோட்டில் குடிமைப் பொருள் தடுப்பு குற்ற பிரிவு எஸ்.ஐ.மோகன் தலைமையிலான போலீசார் நேற்று(ஆக.,16) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சுமோ காரில் ரேசன் அரிசி கடத்திய கொத்தடி சங்கர்(50), பெருவழுதி(30) ஆகியோரை கைது செய்த போலீசார் 700 கிலோ ரேசன் அரிசி மற்றும் டாடா சுமோ காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் முடித்து இன்று மாலை ஊர் திரும்பினர். மண்டபம் முகாம் பூந்தோன்றி காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது பெங்களூரிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 10 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.