Ramanathapuram

News May 30, 2024

கேமரா பொருத்தாத மெடிக்கல் மீது நடவடிக்கை

image

ராமநாதபுரத்தில் மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940, விதிகள் 1945ல் அட்டவணைகள் குறிப்பிட்டுள்ள மருந்துகள் விற்பனை மருந்தகங்களில் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133ன் கீழ் இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஆய்வின் போது கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

ராமநாதபுரம் அரண்மனையின் சிறப்புகள்!

image

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமநாதபுரம் அரண்மனையில் இருந்துதான் சேதுபதிகள், சேது நாடு என அந்நாளில் அழைக்கப்பட்ட நிலப்பரப்பை ஆண்டு வந்தனர். கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே தோற்றமளிக்கும் இதில் இராமலிங்க விலாசம், சங்கர விலாசம், கௌரி விலாசம், அந்தப்புரம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை, இராஜராஜஸ்வரி கோயில், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், சரசுவதி மகால் போன்றவை உள்ளன.

News May 30, 2024

தேசிய சாகச விருது: ராம்நாடு கலெக்டர் தகவல்

image

இந்திய அரசின் 2024ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது விண்ணப்பத்தை https://awards.gov.in/ லிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன்
இணையதள முகவரியில் நாளைக்குள் (மே 31) பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தகுதிவாய்ந்தோர் பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

ராம்நாடு: முதல் மதிப்பெண்… மாணவர்களுக்கு பாராட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி எஸ்டிபிஐ நகர் சார்பில், சாயல்குடி பேரூராட்சி அளவில் +2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எம்.பஞ்ச கல்யாணி மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.தக்ஷ்னா ஆகியோரை எஸ்டிபிஐ கட்சி சாயல்குடி நகர் நிர்வாகிகள் உறுப்பினர் கலந்து கொண்டு நேரில் சந்தித்து பாராட்டினர்.

News May 29, 2024

மின்னணு சாதனம் எடுத்து வர தடை-கலெக்டர்

image

ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிக்கான ஓட்டுகள் ஜூன் 4ம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14மேஜைகள் அமைக்கப்படுகிறது. இதில் வேட்பாளர், தலைமை ஏஜென்ட் அனைத்து சட்டசபை தொகுதி ஒட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட அனுமதியுண்டு. அலைபேசி, ஐபேட், லேப்டாப் உட்பட எந்த மின்னணு சாதனத்தையும் எடுத்து வர தடை என  கலெக்டர் தெரிவித்துள்ளார். 

News May 29, 2024

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி : கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். பட்டணம்காத்தான், பராசக்தி நகரிலிருந்து வரும் கழிவுநீர் சோத்தூரணியில் கலப்பதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை களைய மாற்று நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்த வள்ளி உடன் சென்றனர்.

News May 29, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி

image

ஜூலை13 ல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மே 31ல் துவங்குகிறது. இத்தேர்வுக்கு தயாராகும் இளையோர் தங்கள் போட்டோ, தேர்வு விண்ணப்ப விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் (அ) 80721 79557 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

75 அதிநவீன குடைகள் வழங்கிய ராம்நாடு எஸ்பி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்கள் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு காவலர்களுக்கு உதவும்விதமாக 13 நபர்கள் நிற்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடைகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்நேற்று காவலர்களுக்கு வழங்கினார்.

News May 28, 2024

இசை கலைஞர் தேர்வு: கலெக்டர் தகவல்

image

இந்திய விமானப்படையில் இசை கலைஞர் தேர்விற்கு பெங்களூரு 7ஆவது ஏர்மேன் தேர்வு மையத்தில் ஜூலை 3 முதல் 12 வரை ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இத்தேர்வு குறித்த முழு விவரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, விருப்பம் தகுதி உள்ளோர் ஜூன் 5-க்குள் இணையதளம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெற கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயில் சிறப்பு!

image

புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில். 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் இதுவும் ஒன்று . அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். ராமர் இலங்கைக்குச் செல்வதற்கு முன் சிவனை வழிபட்டுச் சென்றார். பின் பாண்டியர்களால் இத்தலம் விரிவுபடுத்தப்பட்டது. அதன் முதன்மை சன்னதியானது யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களான ஜெயவீர சிங்கையாரியன் மற்றும் அவரது வாரிசான குணவீர சிங்கையாரியன் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டது

error: Content is protected !!