India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுபர்களுக்கு விருது, பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு, ராமநாதபுரம் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தேர்வாகி இருந்தார். இதை தொடர்ந்து சென்னையில் நேற்று(ஆக.,23) நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் மாரியப்பனுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
மத்திய அரசு உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுபர்களுக்கு விருது, பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு ராமநாதபுரம் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தேர்வாகி இருந்தார். இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு பதக்கம், விருது வழங்கி பாராட்டினார்.
நடிகை கவுதமியிடம் சினிமா பைனான்சியர் அழகப்பன், ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்றுள்ளார். ஆனால் நிலம் வாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கவுதமி அளித்த புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் அழகப்பனை கைதுசெய்தனர். கோர்ட்டு அனுமதியுடன் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையை வரும் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஆண்டு தாசில்தாராக பணியாற்றிய தென்னரசு பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைதானார். அவரின் வீட்டில் சோதனையிட்டபோது கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். அவரும், மனைவி சித்த மருத்துவர் சாந்தியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதன்படி நேற்று ராம்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், உதவி ஆட்சியர் முகமது இர்பான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆக,22) மாதந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 84 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இராமநாதபுரம் இராஜசூரியமடையில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில், ஆகஸ்ட் 31 காலை 8.30 மணி முதல் மாலை 5 வரை கொச்சி-கேரளா அமிர்தா வித்யாலய மருத்துவமனை நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட இருதய நோய் வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. *இதனை, உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
சென்னையில் செப். 21 முதல் அக்.6 வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பல்வேறு மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் இடம் பெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செப்.1 க்குள் https://exhibition.mathibazaar.com/login இணையத்தில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (ஆக,22) மாதாந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் நேற்றும்(ஆக.,21), இன்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, விவசாய பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.