Ramanathapuram

News August 27, 2024

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் தொடர் விடுமுறையின் முன்றாம் நாளான நேற்று (ஆக,26) ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியில் குவிந்தனர். தொடர்நது, கடல் பகுதி நீரோட்டமும் சுழற்சியும் உள்ள‌ பகுதி என எச்சரிக்கை போர்டு இருந்தபோதிலும் கடலில் இறங்கி குளித்து புகைப்படம் எடுத்தனர். 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயலில் அழிந்த நினைவு சின்னங்களையும் பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.

News August 26, 2024

காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ் பி

image

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சசிகுமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று (ஆக,26) நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது உடலுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் நேரில் சென்று மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

News August 26, 2024

தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

image

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

News August 26, 2024

ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.

News August 25, 2024

ராமநாதபுரத்தில் ஆக.30ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆக.30ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

ராமநாதபுரத்தில் பேச்சுப் போட்டி – அழைப்பு

image

ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் வரும் (ஆக.29) பாரதி நகர் பீமாஸ் மஹாலில் ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் (ஆக.29) காலை 8 மணிக்குள் முன்பதிவு செய்து மாணவ மாணவியர் கலந்து கொள்ளுமாறு திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

வெறிச்சோடிய இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம்

image

இராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நேற்று முதல் மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது நாளாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இந்த மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News August 25, 2024

தனுஷ்கோடியில் புதிய மணல் திட்டு

image

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால், தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன. இச்சூழலில் அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா வடக்கு பகுதியில் திடீரென 200 மீ., சுற்றளவில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் நின்றபடி கடல் அழகை ரசித்து ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

News August 24, 2024

திமுக மருத்துவ அணி துணை செயலாளரான அமைச்சர் மகன்

image

தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் குமார்‌, இன்று(ஆக.,24) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக மருத்துவ அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் திலீப் குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 24, 2024

ராம்நாடு இன்ஸ்பெக்டருக்கு விருது

image

மத்திய அரசு உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுபர்களுக்கு விருது, பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு, ராமநாதபுரம் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தேர்வாகி இருந்தார். இதை தொடர்ந்து சென்னையில் நேற்று(ஆக.,23) நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் மாரியப்பனுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!