Ramanathapuram

News August 29, 2024

செக் மோசடி – இறால் ஏற்றுமதியாளருக்கு சிறை

image

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரிடம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் இறால் ஏற்றுமதி அபிவிருத்திக்காக ரூ.39 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெயச்சந்திரன் அளித்த காசோலை பணமில்லை என்று திரும்பி வந்துவிட்டது. இது தொடர்பாக செல்வகுமார் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், ஜெயச்சந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.

News August 29, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

ராமநாதபுரம் மாவட்டம், வேளாண் வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை இன்று(29.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News August 29, 2024

தனிநபர் வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடுக்க கோரி மனு

image

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தனி நபர்கள் எந்த ஒரு உரிமையும் பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, இந்து முன்னணி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் அவர்களிடம் நேற்று(ஆக.,28) நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

News August 29, 2024

தடை செய்யப்பட்ட வெடி மருந்து பறிமுதல் 

image

ராமாநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற மீனவர் ஒருவர், அவர் கொண்டு வந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். சாக்கு பையை சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த தடை செய்யப்பட்ட வெடி மருந்துகளான 405 எண்ணம் ஜெலட்டின் குச்சிகள் & சம்பவ இடத்தில் கிடந்த செல்போனையும் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News August 28, 2024

இராமேஸ்வரம் மீனவர் உடல் சடலமாக மீட்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி மீன்பிடிக்கச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பியபோது நடுக்கடலில் படகு மூழ்கி விபத்தானது. இதில் மாயமான மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரை இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் தேடி வந்த நிலையில் தற்போது மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

அண்ணா பதக்கம் பெற்ற காவலர்களுக்கு பாராட்டு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா காவல் பதக்கம் மற்றும் பத்து லட்சம் வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப் சிங் ஆகிய இருவரையும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் இன்று (ஆக.28) நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

News August 28, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

image

ராமேஸ்வரத்திலிருந்து ஆக.,26ல் கடலுக்கு சென்ற விசைப் படகுகள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, 1 படகு & அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த விசைப்படகு சேதமாகி கடலில் மூழ்கி இருவர் மாயமாகினர். இதையடுத்து சிறைபிடித்த மீனவர்கள், மாயமான இருவரை தேடி மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(ஆக.,28) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News August 27, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில்வர் தட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம் நரசிங்ககூட்டம்   கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நெகிழி பொருட்களை தவிர்க்கும் வகையில், மாணவர்களுக்கு சில்வர் தட்டு மற்றும் சில்வர் தண்ணீர் பாட்டில்களை அப்பள்ளியின் ஆசிரியர் தன்னுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

News August 27, 2024

பரமக்குடி பூ மாரியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமண குடியிருப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பூத்தட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று(ஆக.,27) அதிகாலை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

News August 27, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை இன்று(ஆக.,27) கைது செய்துள்ளது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படைகையும் பறிமுதல் செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

error: Content is protected !!