India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சுதிர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
வண்டி எண் 20896 என்ற புவனேசுவர்- மண்டபம் வராந்திரா விரைவு ரயில் இன்று (25/10/24) மற்றும் நாளை (26/10/24) ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலில் பயணிப்போர் மாற்று ரயிலை பயன்படுத்திக்கொள்ள தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2024) மாவட்டத் தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்துகொண்டு கடன்களை வழங்கினார். நிகழ்வில், ஏராளமானோர் தொழிற்கடன்களை பெற்றனர்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. அப்போது, “பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை; எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எதை அனுமதிக்கக்கூடாது என்பது மாவட்ட நிர்வாகத்திற்குதான் தெரியும்; இம்மனு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.25) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்.30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன் பின் நவ.20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க அரியாங்குண்டில் தனியார் பள்ளி மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று (அக்.24) கைது செய்தனர். இந்நிலையில் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும் 2 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போலீசார் இருவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் 300 கிராம் ஐஸ் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவிபட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெரு முகமது ஹாரிஸ் (29), ராமநாதபுரம் நேரு நகர் ஜெகதீஷ்(29) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மண்டபம் கடலோரப் காவல் படையினரால் வருகிற(அக்.28) அன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இராமேஸ்வரத்தின் வடகிழக்கு & தனுஷ்கோடி பகுதியில் உள்ள கடல் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை சுங்க கட்டுப்பாட்டிற்குட்பட்ட விசைப்படகு மட்டும் நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மண்டபம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொண்டி அருகே சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது வீட்டில் திடீரென சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுருநாதன் & தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுச்சென்றனர்.
Sorry, no posts matched your criteria.