Ramanathapuram

News September 23, 2024

தொண்டி அருகே கடலில் கவிழ்ந்த படகை மீட்ட மீனவர்கள்

image

தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சக மீனவர்கள் சென்று கண்ணன், பாஸ்கரன், மதியழகன், கந்தன், ராபின்சன், நவனேஷ்
ஆகியோர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்தனர். இந்நிலையில், இன்று (செப்.23) 4 விசை படகில் சென்று 4 படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றால் இணைத்து கவிழ்ந்த விசை படகை மீட்டனர்.

News September 23, 2024

இராமநாதபுரம் ஆட்சியரிடத்தில் 352 பேர் மனு

image

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (செப்.23) நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு, குடிநீர் இணைப்பு கோரி 352 மனுக்கள் குவிந்தன.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ உடனிருந்தனர்.

News September 23, 2024

ராமநாதபுரம்: அரசு வேலைவாய்பிற்கான ஓர் வாய்ப்பு

image

2024ல் ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பில் DEO, Driver, Cleaner. வேலைக்கான மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (செப்.24.) ஆகும். 12th, 8th, Any Degree, B.Sc, Diploma, Nursing தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை சம்பளம் பெறலாம்.

News September 23, 2024

பாம்பன் தூக்கு பாலம் பணிகள் விறுவிறு!

image

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் கிட்டத்தட்ட முடிவடைகின்ற தருணத்தில் செங்கு தூக்குப்பாலத்தை ஹைட்ராலிக் ஜாக்கி வைத்து சிறிது சிறிதாக ஊழியர்கள் தூக்கி வைக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் புது பாம்பன் பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 23, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி நவாஸ்கனி

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 2ஆவது முறையாக வெற்றிபெற்ற நவாஸ்கனி எம்பி அவர்கள், நேற்று(செ.,22) அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி மணமேல்குடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 22, 2024

ராமநாதபுரத்தில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு

image

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிர்மல் குமார், மாலா ஆகியோர் தலைமையில் இன்று(செப்.,22) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி குமரகுரு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நீதிபதிகள், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், வருவாய்துறை அதிகாரிகள், போலீசார், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 22, 2024

ராமநாதபுரம் மக்கள் சேவையாளர்களுக்கு விருது

image

ராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் சார்பில் முதல் மண்டல மாநாடு இன்று நடந்தது. மாவட்ட ஆளுநர் அய்யாத்துரை தலைமை வகித்தார். இதில் சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன்(பசுமை காவலர்), திருமலை (பசிப் பணி நீக்கம்), லோக சுப்ரமணியன்(கலை பயிற்றுநர்), பாலசுப்ரமணியன்(சிறந்த ஊராட்சி நிர்வாகம்), சதீஷ் குமார்(ரத்த தானம்) ஆகியோருக்கு சிறந்த சேவையாற்றியமைக்காக விருது வழங்கப்பட்டது.

News September 22, 2024

பாம்பன் பாலத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை

image

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் புதிதாக கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், பழைய ரயில் பாலத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இன்று(செப்.,22) கோரிக்கை மனு அளித்தார். மேலும் சென்னை – திண்டிவனம் – திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார்.

News September 22, 2024

திருவாடானை அரசு கல்லூரி மாணவர் அசத்தல்

image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான கேரம் போர்டு பிரிவில், திருவாடானை அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். முதுகலை 2ஆம் ஆண்டு தமிழ் பிரிவு மாணவர் முனீஸ்வரர் ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போர்டு விளையாட்டில் 2ஆம் பரிசு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து திருவாடானை அரசு கல்லூரி & மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News September 22, 2024

ஆர்எஸ் மங்கலம் மருத்துவமனையில் தீ விபத்து

image

ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த ஏசி, பிரிட்ஜ் மற்றும் பெட் உள்ளிட்ட பொருட்கள் நாசமாயின. ஆர்எஸ் மங்கலம் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எவ்வாறு நடந்திருக்கும் என்பது பற்றி ஆர் எஸ் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!