Ramanathapuram

News September 30, 2024

5 லட்சம் பரிசு வென்ற தூக்கணாங்குருவி பருத்தி சேலை

image

பரமக்குடி எமனேஸ்வரம் அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் நெசவாளர் பிரேமா என்பவர் கூட்டுடன் தூக்கணாங்குருவி இருப்பது போன்று பருத்தி சேலையில் வடிவமைத்துள்ளார். அதன் நாளா புறமும் சிற்பங்கள் வருவது போன்று நெய்திருந்தார். இந்த சேலைக்கு தமிழக அரசு சார்பில் முதல் பரிசு தேர்வு செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

News September 30, 2024

இராமநாதபுரம் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்களை தூர்வார தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள், எத்தனை கண்மாய்கள் உள்ளன என்றும், ஏரிகளின் பரப்பளவு, அதன் கொள்ளளவு எவ்வளவு, கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டது என்று ஐகோர்ட் மதுரை கிளை இன்று (செப்.30) கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

News September 30, 2024

கைத்தறி சேலையில் பாம்பன் பழைய பாலம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் நெசவாளர் அலமேலு என்ற பெண் பருத்தி சேலையில் பாம்பன் பழைய பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த சேலைக்கு இரண்டாம் பரிசு தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று (செப்.30) கைத்தறி உதவி இயக்குனர் சேரன் பாராட்டினார்.

News September 30, 2024

மண்டபம் அருகே பாஜகவில் இணைந்த 50க்கும் மேற்பட்டோர்

image

மண்டபம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று (செப்.29) பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்‌‌. அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் கதிரவன் மற்றும் பாஜக மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பீரவின் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 30, 2024

ராமநாதபுரம் அருகே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

image

ராமநாதபுரம் எம்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் கணேஷ் முருகன் (39). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இன்று (செப்.29) மாலை தகராறு ஏற்பட்டது. இதில் கணேஷ் முருகனின் மனைவி ரோஜா மலரை சிலர் தாக்கியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கணேஷ் முருகன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கணேஷ் முருகனை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

News September 29, 2024

கடலில் விளையாடிய சிறுவன் மீது படகு மோதி பலி

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த 18 பேர் சரக்கு வாகனத்தில் சாயல்குடி அருகே தெற்கு நரிப்பையூர் கடற்கரைக்கு இன்று (செப்.29) சென்றனர். கடலில் குளித்து விளையாடிய அவர்கள் கரையில் நிறுத்தியிருந்த படகை தள்ளி விளையாடினர்.அலை வேகத்தில் படகு நகர்ந்து காரியாபட்டியைச் சேர்ந்த நாகூர்கனி மகன் முஹமது சலாம் (16) மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாயல்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 29, 2024

இராமநாதபுரம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்பு

image

இராமநாதபுரம் நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் அருகே உள்ள ஊராட்சிகளான அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை, பேராவூர், இளமனூர், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, ராஜசூரியமடை, புத்தேந்தல் ஆகிய எட்டு ஊராட்சிகள் ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் ராமநாதபுரம் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 117118 ஆக உயரும்.

News September 29, 2024

ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள் போராட்டம்

image

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்யும் ஊழியர்களை கொத்தடிமை போல் நடத்தும் நிர்வாகத்தை கண்டித்தும் நிறுவனத்தின் மேலாளர் ரகு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதசுவாமி திருக்கோவில் ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் AITUC சார்பில் மாபெரும் வேலை நிறுத்த உள்ளிருப்பு போராட்டம் (செப்.30) நடைபெறும் என AITUC மாவட்ட செயலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்

News September 28, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு பணிநியமன ஆணை

image

ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (28.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டு தேர்வு செய்யப்பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 28, 2024

தேசிய விருது பெற்ற ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி பெண்

image

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான கையெறி பந்து, அமர்ந்து விளையாடும் கைப்பந்து போட்டிகள் நடந்தன. இதில் பல மாநிலங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 7 பேர் கொண்ட தமிழக அணியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் பாரதிநகர் மு.சர்மிளா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவர் கம்போடியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளார்

error: Content is protected !!