India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமாநாதபுரம் மக்களே, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். *ஷேர் பண்ணுங்க*
மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக்அமீன் தலைமையில் காவலர்கள் சரவணன் முத்துக்குமார் ஆகியோர் வேதாளை கடற்பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 1000 கிலோ சுக்கு என்பது தெரிய வந்து, சரக்கு வாகனத்தையும், சுக்கு மூடைகளையும் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
இன்று (09.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு கொள்ள மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம். ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி, திருவாடானை, பரமக்குடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் நகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே இன்று (09.08.2025) மதியம் 2.45 மணியளவில் ‘ஜனார்த்’ என்ற 10 வயது சிறுவன் தனது தாயுடன் வந்தவர் காணாமல் போய்விட்டார். இச்சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்ககலாம். காவல் நிலைய எண் – 9498101651. சார்பு ஆய்வாளர் – 9442758281.
ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இன்று (ஆகஸ்ட்.09) அவருக்கு திமுக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார்.
ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
▶️10 ஆம் வகுப்பு தேர்ச்சி
▶️சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
▶️விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️ செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
▶️மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <
இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் புதிய எச்சரிக்கையுடன் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் பொய் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.