India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய 2 நாட்கள் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. நவ.13ஆம் தேதி மண்டபம் – பாம்பன் இடையே ரயில்வே வழித்தடத்திலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் பாலத்திலும் ஆய்வு செய்கிறார். மேலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர். நகரில் கருவாடு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் சீலா. ஊளி. நெத்திலி. வாளை உள்ளிட்ட கருவாடுகள் அண்டை மாவட்டங்களான மதுரை. சிவகங்கை. தேனி. விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சில்லறை வியாபாரிகள் கருவாடுகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1.37 லட்சம் பரப்பளவில் நடப்பாண்டு சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நவ.15 வரை காப்பீடு செய்ய அறிவித்த நிலையில் பட்டா சிட்டா அடங்கல் பெற காலதாமதமாவதால் நவ.30 வரை பதிவை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்டபம் காவல் நிலையம், காவல் ஆய்வாளரால் கடந்த 04.08.2024 அன்று மண்டபம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட 1290 கிலோ உரிமை கோரப்படாத சமையல் மஞ்சள் மூடைகளை பொது ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15.11.2024 அன்று மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் வட்டாட்சியர் தலைமையில் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாடானை தாலுகா நம்புதாளையில் கடந்த மாதம் பரமக்குடியை சேர்ந்த முத்துகுமார் என்ற ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தொண்டி போலிசார் சிவகங்கை சரவணன் என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரைவர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் விசாரனையில் இன்று அஞ்சுகோட்டை கரையா கோட்டையை சேர்ந்த முருகன் மகன் வெற்றிவேல் (21) கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மன நலம் பாதித்தோர், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் பதிவு, உரிமம் பெற இணைய தளம் PORTAL, அலுவலகம் மூலம் 1 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தசாமி மகன் சங்குநாதன்(39) என்பவர் நிலம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாராம். இது தொடர்பாக ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்குநாதனை கைது செய்தனர். இவர் பாரதி நகர் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு காயில் சுற்றும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
திருவாடானை குருந்தங்குடியை சேர்ந்தவர் சேதுராமன்.இவரை முன்விரோதம் காரணமாக அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக திருவாடானை போலீசார் குருந்தங்குடி சூர்யா, சக்திவேல், ஊரணி கோட்டை அண்ணாதுரை, சிவானந்தம் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 1 ஆவது வார்டு மீனவர் நகரில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் கடல் நீர் தாழ்வான பகுதிகள் வழியாக ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அப்பகுதியில் மணல் நிரப்பி தாழ்வான பகுதியின் மட்டம் உயர்த்தும் பணியை பேரூராட்சி தலைவர் ராஜா இன்று ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.10) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.