India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச்சேர்ந்த காளீஸ்வரி என்பவர் பரமக்குடி ஜீவா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி தைராய்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(நவ.17) இரவு மர்மமான முறையில் தரைப்பாலம் வைகை ஆற்றில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் போலீசார்கள் காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*
புதுடில்லி தேசிய பால பவனில் தேசிய குழந்தைகள் தினவிழா நவ.21, 22, 23 ல் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் தலைமையில் மாணவர்கள் பிரகுல், ஹரி பிரித் திவிராஜ் கிஷோர், புகழ்மதி ஆகியோர் கலை நிகழ்வில் பங்கேற்க இன்று டில்லி புறப்பட்டனர். இவர்களை முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,374 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் 2 வது நாளாக இன்று நடந்தது, இதன்படி கீழக்கரை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் முகவரி மாற்றம், பெயர் பிழை திருத்தம் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இதனை கீழக்கரை நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான முஹமது சுகைபு பார்வையிட்டார்.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை கடற்படையினரும், கல்பிட்டியா போலீசாரும் இணைந்து முசல்பிட்டியா பகுதியில் நடத்திய சோதனையில், 18 சாக்கு மூட்டைகளில் இருந்த 4 லட்சத்து 42,680 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் பாஜக கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. கிழக்கு மண்டல தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இதில் கிளைத்தலைவராக நாகு நாகேந்திரன் மற்றும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கான கட்சி பணி குறித்து தேர்தல் பணி பொறுப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழகத்தில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் துவங்க வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெறலாம்.இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழில் மைய அலுவலக தொலைபேசி 04567–290459, 89255 33983, 89255 33984 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இன்று (16.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.