India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமாயணத்தில் ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றபோது, இதை ஒரு முக்கிய இடமாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுவது ஒரு காரணமாகும். மேலும் இது முகவை என்றும் அழைக்கப்படுகிறது. வைகையின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. மேலும் முகவை என்றால் அள்ளுதல் என்றும் பொருள். இந்தப் பகுதி நெல் விளையும் பூமியாக இருந்ததால் கதிரடித்து நெல் அள்ளும் இடம் என்றும் பொருள்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தை அனுசரித்து அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 23.03.2025 இல் நடைபெறவிருந்த உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டத்தை நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு இசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச்.23) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரையரசன் இவரது மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவின் கணவர் மதன்பாண்டி சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார். குடும்ப தலைவியாக இருந்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. *ஷேர்
மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் படகு தளம் அமைய உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லுாண்டி தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழி சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது. படகு தளம், ‘டி’ வடிவில் 120 மீ., நீளம், 7.5 மீ., அகலம் 6 அடி உயரத்தில் அமையவுள்ளது. *ஷேர்
காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.