Ramanathapuram

News November 19, 2024

இராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

News November 19, 2024

பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து கலெக்டர் தகவல்

image

இராமநாதபுரம் 1ன் கீழ் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி, சத்திரக்குடி ஆகிய வட்டாரங்களுக்கு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லி.,நிறுவனம், 2-ன் கீழ் இராமநாதபுரம், திருப்புல்லானி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடாணை, நயினார்கோவில், மண்டபம் ஆகிய வட்டாரங்களுக்கு பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்திற்கும் அரசாணை வழங்கி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 19, 2024

இராமநாதபுரத்தில் இன்று அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி

image

இராமநாதபுரத்தில் இன்று (நவ.19) தமிழக பால் வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பரக்கத் திருமண மஹாலில் காலை 10 மணியளவில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

News November 19, 2024

தனுஷ்கோடி ரோடு கடைகளால் ஆக்கிரமிப்பு

image

தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக 20 மீனவ பெண்கள் பழங்கள் விற்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு போட்டியாக 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாயுள்ளது. மேலும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் தனுஷ்கோடி கடலோரம் வீசப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

News November 18, 2024

இராமநாதபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.22 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

வைகை ஆற்றுக்குள் இருந்து பெண்ணின் உடல் மீட்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச்சேர்ந்த காளீஸ்வரி என்பவர் பரமக்குடி ஜீவா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி தைராய்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(நவ.17) இரவு மர்மமான முறையில் தரைப்பாலம் வைகை ஆற்றில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் போலீசார்கள் காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*

News November 18, 2024

டெல்லி சென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

image

புதுடில்லி தேசிய பால பவனில் தேசிய குழந்தைகள் தினவிழா நவ.21, 22, 23 ல் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் தலைமையில் மாணவர்கள் பிரகுல், ஹரி பிரித் திவிராஜ் கிஷோர், புகழ்மதி ஆகியோர் கலை நிகழ்வில் பங்கேற்க இன்று டில்லி புறப்பட்டனர். இவர்களை முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.

News November 17, 2024

திட்டக் குழு உறுப்பினர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,374 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் 2 வது நாளாக இன்று நடந்தது, இதன்படி கீழக்கரை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் முகவரி மாற்றம், பெயர் பிழை திருத்தம் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இதனை கீழக்கரை நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான முஹமது சுகைபு பார்வையிட்டார்.