Pudukkottai

News March 10, 2025

திருவப்பூர் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

image

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கியும், பலர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி காவடி எடுத்தும், பறவை காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பாபிஷேக பணி கோயிலில் நடைபெறுவதால் சாமி புறப்பாடு, தேரோட்டம் நடைபெறாமல் கோயிலில் உள்பகுதியில் உற்சவர் அம்மனை வைத்து வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News March 10, 2025

புதுக்கோட்டை: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். இப்போதே SHARE பண்ணுங்க…

News March 10, 2025

புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச்.10) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக மார்ச்.15ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். SHARE NOW.

News March 9, 2025

பாதுகாப்பு பணியில் 380 போலீசார்- SP அறிவிப்பு

image

புதுக்கோட்டை நகரில் வரலாற்று சிறப்புமிக்க திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 380 காவல்துறையினர் ஈடுபட இருப்பதாகவும், காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், இப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக எஸ்பி அபிசேக் குப்தா இன்று இரவு தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

புதுகை: பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 வருடம் சிறை 

image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அலுவலர் மன்றம் அலுவலகம் நுழைவாயில் முன்பு தனியார் விளம்பர போர்டுகள் மற்றும் கட்சி சார்ந்த விளம்பர போர்டர்கள் வைக்கப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்த நிலையில் தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைப்பவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனை 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News March 9, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

புதுக்கோட்டை மாவட்டதில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற (மார்ச்-11) அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால்,கடும் வெயிலை தாங்க முடியாத புதுக்கோட்டை மக்கள் மழையை எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

News March 9, 2025

நிலங்களை அளவிட இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவிட செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிலையில் மாவட்டத்தில் நிலங்களை அளவிட இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

News March 8, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News March 8, 2025

புதுக்கோட்டை: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 7, 2025

அழுகிய நிலையில் தூக்கில் ஆண் சடலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான‌ காட்டில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதை பொதுமக்கள் பார்த்தவுடன் உடையாளிப்பட்டி காவல் துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!