India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கருகாக்குறிச்சி கீழத்தெரு குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் தொடர் மணல் திருட்டு தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் ஜமுனா நேற்று இரவு நேர திடீர் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆற்று மணலை திருட்டு தனமாக மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மணலுடன் மாட்டு வண்டி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்ட, நாகை,மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை இந்திய விடுதலைக்கு பின் மார்ச் 3, 1948-இல் இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக விளங்கியது. பின்னர் ஜனவரி 14, 1974 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்த முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

புதுகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 2025-26 ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று(அக்.15) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

புதுகை, மாங்கோட்டை தெற்குபட்டியை சேர்ந்தவர் ஜெய பாண்டிமுத்து(26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (அக்.14) மதுபோதையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆமாஞ்சி வட்டம், காதம்மரா காளி கோவில் வனப்பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்து மானை அடக்கம் செய்தனர். குறிப்பாக இப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் சுற்றி திரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <
Sorry, no posts matched your criteria.