India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலுப்பூர் சின்ன கடைவீதியில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஹால்மார்க் முத்திரையிடாத நகைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த இந்திய தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். மத்திய அரசின் ஹால்மார்க் எண் முத்திரை இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1643 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் வழியாக 71 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் தமிழக ஆளுநர் ரவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 270 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர் என எஸ்பி அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் நாளை 28.10.2024 திங்கட்கிழமையன்று
காலை 12:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் – நெடுவாசல் கிழக்கு ஊராட்சியில் புதிய சாலை பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கவுள்ளார்கள்.இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்
புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை கீழ ராஜவீதி மற்றும் வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே திறந்து வைக்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பதுகை மாவட்டம் மதகுபட்டியை சேர்ந்த ஆனந்தியின் 2 வயது குழந்தை வைரன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தலையில் அணியும் கிளிப்பை விழுங்கியது. இதனால் மூச்சுவிட திணறிய குழந்தையை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வயிற்றில் இருந்த கிளிப் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற புதன்கிழமை (அக்.30) ஆட்டுச்சந்தை நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த எம்.பி. அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், ரயில்வே இணை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில் தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள் என்று கூறியும், மீண்டும் மீண்டும் இந்தியில் கடிதம் வருகிறது. அதனால், அவர்களுக்கு புரியும்படி தமிழில் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி வடக்கு பட்டி பகுதியை சேர்ந்த தனபால் (32), பிரேம்குமார் (22) அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (22) ஆகிய மூவரும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இலைகடிவிடுதி, மயிலாடி தெரு,கரும்புளிகாடு பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து10 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுகை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுகை முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.