India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணமேல்குடி சரக விஏஓ அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி காவல் துறையினர் இறந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணமேல்குடி போலீஸ் சார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி ஆடுகளை வாங்குவதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் வெள்ளாடுகள், கிடா, செம்மறி ஆடுகள் உள்ளிட்டவை அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு நாளில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து புதுகை மாவட்டத்துக்கு கடத்தி செல்வதாக இலுப்பூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு திவ்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 650 கி புகையிலை இருப்பது தெரியவர 2 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பெட்ரோல் பங்க் அருகே சத்யராஜ் (37) என்பவர் நேற்று (அக்.16) மது அருந்திக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மழையூர் காவல்துறையினர் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அவரை கைது செய்து மேலும் அவர் மீது வழக்குப்பதிந்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !

மதுரையில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு நேற்று (அக்.16) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை லெம்பலக்குடி டோல்கேட் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டார். பின்னர் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக ஓட்டுனர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளியன்று நடைபெறும் பட்டாசு கடைகளின் வியாபாரத்திற்கு அரசு அனுமதி சான்று சென்ற ஆண்டு வரை முன்கூட்டியே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 3 தினங்களே உள்ள நிலையில் இன்னும் பட்டாசு கடைகளுக்கான சான்று வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விரைவாக அனுமதி வழங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.