Pudukkottai

News November 5, 2024

வெறிநாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

image

கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அப்துல் ஜபார் மனைவி பிச்சையம்மாள். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக கடந்த ஒரு வருடமாக 9 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆடுகளை வீட்டில் கட்டி வைத்துள்ளார். இன்று காலை வெறி நாய்களால் கடிபட்டு, தோல் கிழிந்து, குடல் வெளியே வந்தும் ஆடுகள் இறந்து கிடப்பதை அவர் பார்த்து கதறி அழுதார்.

News November 5, 2024

புதுக்கோட்டையில் மாநில விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுக்கோட்டையில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த உடல் கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 5, 2024

புதுக்கோட்டை வழியாக செல்லும் ரயில் ரத்து

image

திருச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக காரைக்குடி – திருச்சி இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து காலை 9:40 மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் (வண்டி எண்06888) நாளை (புதன்கிழமை) முதல் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

News November 5, 2024

புதுக்கோட்டையில் புள்ளியியல் கணக்கு

image

புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் பார்வைக்காக 1813 இல் ஓர் புள்ளிவிவரக் கணக்கு பனை ஓலையில் தயாரிக்கப்பட்டது. இத்தொகுப்பு 1625 ஏடுகளை கொண்டது. இது தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் உள்ளது. இதில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் கண்ட கிராம வாரியான புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Way2News “காலச்சுவடு” தொடரும்..

News November 4, 2024

புதுகை: மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு 

image

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் வட்டம் மற்றும் சரகம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 13ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.11.2024 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் புண்ணியவயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் மனுக்களை வழங்குமாறு ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.

News November 3, 2024

விராலிமலை:வாகனம் மோதி கட்டடத் தொழிலாளி பலி

image

விராலிமலையை அடுத்துள்ள கசவனூர் வடக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(59). கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை கொடும்பாளூர் கசவனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2024

இலுப்பூரில் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

image

இலுப்பூர், புங்கினிப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (39) இவர் இலுப்பூரில் உள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது இதில்  படுகாயம் அடைந்த குமரேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதுகுறித்து போலீசார் நத்தம்பண்ணையை சேர்ந்த புகழேந்தி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News November 3, 2024

பாத்திமாநகரில் பெட்டிகடையில் மது விற்றவர் கைது

image

பாத்திமாநகரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு இன்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாத்திமாநகரில் ஒரு பெட்டிகடையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட பூதக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News November 3, 2024

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மகன் தற்கொலை!

image

புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் (29). இவருக்கும்
இவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராசு விசாரணை நடத்தி வருகிறார்.

News November 2, 2024

புதுக்கோட்டையில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மார்க் வருமானம் 70% உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 7.9 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது கிட்டத்தட்ட ரூ.13 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானம் 70% கிடைத்துள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.