Pudukkottai

News November 7, 2024

புதுகையில் ‘போலிஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், பிரச்சனைகளுக்கான உதவியைக்கோரும் வகையிலும் ‘போலிஸ் அக்கா’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 30 பெண் போலிஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News November 7, 2024

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி முகாம் 

image

படித்த வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக வரும் 9ஆம் தேதி அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் 16ஆம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

கறம்பக்குடியில் திருமணமான இளம்பெண் மாயம்!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்மானிப்பட்டைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் நேற்று(நவ.5) திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போனார். இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கறம்பக்குடி போலிஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2024

கொப்பனாபட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

பொன்னமராவதி தாலுகா கொப்பனாபட்டி காட்டுப்பட்டி விளக்கில் முதியவரின் ஆண் சடலம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எந்த ஊர்? கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2024

கந்தர்வகோட்டை பிசானத்தூரில் பைக் மோதி ஒருவர் பலி!

image

கந்தர்வகோட்டை அருகே கருப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் குஞ்சான் மகன் தங்கராஜ்(53). இப்பகுதியில் ஆடு மேய்த்து வந்த இவர் நேற்று பிசானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்தார். பிறகு சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2024

நவ.8இல் வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டையில் வருகின்ற நவ.8ஆம் தேதி  காலை 9 மணி அளவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக எம்.பி. அப்துல்லா ஏற்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீ பாரதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.  கிராமப்புறத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என எம்.பி. அறிவித்துள்ளார். 

News November 6, 2024

கோவில் விழாவில் மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு

image

அன்னவாசல் அருகே உள்ள கண்டைக்கோன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணு (65) இவர் அன்னவாசல் அருகே உள்ள தாண்றீஸ்வரத்தில் நடந்த கோவில் விழாவில் சாமி கும்பிட்டு விட்டு அங்கு கோவில் திடலில் நடந்த அன்னதானத்தை வாங்குவதற்கு வரிசையில் நின்ற போது அங்கு வந்த மர்ம நபர்கள் முத்துக்கண்ணு கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடியுள்ளனர் இதுகுறித்து முத்துக்கண்ணு அன்னவாசல் போலீசில் புகார் அளித்துள்ளார்

News November 6, 2024

புதுகை: ஒரு மாத கால அவகாசம்

image

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் அந்த இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

News November 6, 2024

கொடும்பாலூரில் கணவன், மனைவி தற்கொலை

image

விராலிமலை அடுத்த கொடும்பலூரை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி( 69),  அழகம்மாள் (54 ). இருவரும் கொடும்பலூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அவரது மகன் சிவசக்தி வேல் (33) அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News November 5, 2024

கல்வி நிறுவன கட்டடங்களை வரன் முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்மறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்