India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆலங்குடி, வம்பன் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24, (செப்.17) புதுகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வம்பன் வேளாண் கல்லூரி அருகே செல்லும் பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ஊர்காவலன் 42, ஓட்டி வந்த பாரத் பெண்ட்ஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுகை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு நாளை(செப்.18) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில், நமணசமுத்திரம் PD shop, புதுகை சமூக நீதி மாணவியர் விடுதி, சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையம், மச்சுவாடி கால்நடை பண்ணை, வேப்பங்குடி கனிம விவசாய கலந்தாய்வு, கைக்குறிச்சி நான்கு வழி சாலை, அறந்தாங்கி பரமந்தூர் கோயில் பகுதியில் ஆய்வு நடைபெறுமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கலெக்டர் அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், எம்எல்ஏ சின்னதுரை, சுகாதார இணையகுனர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பன்கேற்றனர்.

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<

புதுகை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <

புதுக்கோட்டை , செம்பட்டி விடுதி அடுத்த கம்மங்காடு கிளை சாலையில் பைக் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்த சங்கர் (52) உயிரிழந்தார். ஆட்டோவில் பயணிகளாக வந்த ராஜேஷ் (18), லலிதா (33), கவிதா (41), பன்னீர்செல்வம் (40) ஆகியோரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சங்கரின் மகன் ஜெகதீஷ் (22) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் கோவில் அருகே உள்ள சாலையில் சண்முகம் (72) என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த பாலாஜி (19) மோதியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சண்முகம் மகன் ராம்குமார் (29) அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.