India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 7ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் அன்று நார்த்தாமலை தேர்த்திருவிழா உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 8ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
புதுக்கோட்டை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் கோட்டம் வாரியாக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனுார்,திருமயம் ஆகிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றுவது, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றுவது உள்ளிட்ட குறைகளை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.
புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளர் (HELPER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளது. 10, 12, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது.மேலும், நகை கடை வைத்திருப்பவர்களின் தொழில் மேம்படும். உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து செல்வம் பெருக்க உதவுங்கள்.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Tailor பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 7ஆம் தேதி தேர்வுகள் மற்றும் அவசர பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது புதுகை மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சித்தன்னவாசல், 2.மலையடிபட்டி குகைகோயில், 3.புதுகை அருங்காட்சியம், 4.நார்த்தாமலை குடவரை கோயில், 5.திருமயம் கோட்டை போன்ற இடங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..
திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேதுபதி விஜயரகுநாத தேவர் எனும் கிழவன் சேதுபதி மன்னரால் 1676ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரை கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், விஷ்ணு சன்னிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கும் என்கின்றனர். SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.