India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுய உதவி குழு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவை ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் தகுதியானவர்கள் எனவும் மணிமேகலை விருது பெற வட்டார மையங்களில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்து பயனடைய வேண்டுமென ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாத சாமி கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதால் இது குலோத்துங்க சோழீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. கர்மவினை தீர காசி, ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்வதை போல் இங்கும் செய்யலாம். இங்கு சென்று 108 தாமரைகள் வைத்து வழிபட்டால் மனைகளில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். மேலும் கடன் தொல்லைகள் நீங்கும் என கூறப்படுகிறது. உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (marketing executive) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
கீரனூர் அருகே புலியூரில் 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய் லாவண்யா-வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் டீச்சர் (281), உதவியாளர் (196) ஆகிய பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
புதுகை அங்கன்வாடி
டீச்சர் 281 – பேர்.
உதவியாளர் – 196 பேர் பணியிடத்திற்கு
தமிழக அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறதுஇப்பணிகளுக்கென 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் மு. அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் இந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாரதர் இந்த மலையில் வந்து தங்கியதால் இதற்கு நாரதர்மலை என அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தமலை என்றானது. இங்குள்ள முத்துமாரியம்மனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் மற்றும் அக்னி கரகம் எடுத்து வழிபட்டால் தீரா நோயும் தீரும் என்பது ஐதீகம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் பெற வரும் 7ஆம் தேதி (நாளை) முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா அவர்கள் தெரிவித்துள்ளார். இதை விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணையத்தள முகவரி மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.