Pudukkottai

News March 28, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு இடமா?

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையொட்டி மணமேல்குடி (கோடியக்கரை) கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் மென்மையான அலைகள் காலை வருடிச் செல்லும். மன அமைதியைக் கொடுக்கும் கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்கு தீவு போன்று இயற்கையாகவே அமைந்த அலையாத்தி காடுகளும் அமைந்திருக்கிறது. நண்பர்களுக்கு SHARE செய்து, சும்மா ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணுங்க..

News March 28, 2025

புதுகை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 27, 2025

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாறு

image

புதுக்கோட்டை சமஸ்தானம், தொண்டைமான் மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு தனி அரசாக 17 ஆம் நூற்றாண்டில் இருந்தது.  ரகுநாத தொண்டைமான் என்பவரால் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது. பின்னர், 1947-ல் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1974-ல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

News March 27, 2025

அக்னிபாத் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

புதுகை மாவட்டத்தில் 17 1/2 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச்.3ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://www.joinindianarmy.nic.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் கணிதம், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு திருச்சியில் நடைபெறும். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள். 

News March 27, 2025

புதுக்கோட்டை பெண்களின் கவனத்திற்கு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட அளவிலான உள்ளூர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் (தலைவர்), மாவட்ட சமூக நல அலுவலர் (செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து அறிந்துகொள்ளுங்கள். இச்செய்தியினை SHARE செய்து பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள்.

News March 27, 2025

இளைஞரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

image

ஆலங்குடி அருகே பிலாபுஞ்சை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (21) என்பவர் கடந்த 23ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பலா காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News March 26, 2025

புதுகை: 19-ம் நூற்றாண்டின் கல்வெட்டில் அரிய தகவல்

image

புதுகையில் நைனா ராஜூ தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியின் போது 19-ம் நூற்றாண்டு கல்வெட்டு வெளிப்பட்டது. இக்கல்வெட்டு மூலம் 1858-ம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்கிறது. அதில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, ராஷச வருடம் வைகாசி மாதம், ஆங்கில வருடம் 1855 மே மாதம் எனவும், கல்வெட்டில் 4 வகையான ஆண்டு கணக்குகள் இருந்துள்ளது என்றனர்.

News March 25, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

image

புதுகை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச்.26) காலை 10 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் CEMONC கூட்ட அறையில் நடைபெற உள்ளது. இதில் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், விதவைகள், படை வீரர்களை சான்றோர், மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

புதுக்கோட்டை மாணவர்களுக்கு நற்செய்தி

image

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

News March 25, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதல் கணவன் கைவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!