India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த வேட்டனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (25). இவர் நேற்று மணமேல்குடி சுடல வயல் அடுத்த சிஎம்பி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென துரதிஷ்டவசமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் காளிமுத்து (39) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரிமேட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மொபட்டில் மருப்பினி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்க டயரின் அடியில் விழுந்தார். இதில் அவர் உடல் மீது லாரி ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மக்களே இன்று (செப்.24) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுகை, கோட்டைபட்டினம் அடுத்த செல்லப்பன்கோட்டை கல்லணை கால்வாய் ஆற்றில் இன்று ஆண் சடலம் மீட்கப்பட்டது. குறிப்பாக அருகில் இருந்த பொதுமக்கள் ஆற்றங்கரையில் மிதந்த ஆண் சடலத்தை பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் ஆண் சடலத்தை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <

புதுகை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

புதுகை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (செப்.24) காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்படிப்பு மேற்கொள்ள தயாராக இருக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை வழங்கி உடனடியாக கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.