India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாநகரில் புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், தெற்கு 4-ம் வீதி, ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், ராஜ வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Now..
புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) பணிபுரிய தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தார். இதுகுறித்து அவா் கூறியது, புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) குழந்தைகள் நலன்சாா்ந்த இந்த மையத்தில் பணியாற்ற 3 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் <
அன்னவாசல் கோவில்காடு பகுதியை சாந்தூரப்பன் இவரது மகள் சிவசுடர் (20) நேற்று முன்தினம் (ஜன.16) அன்னவாசலில் டைப்பிஸ்ட் பயிற்சிக்கு சென்ற நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கீரனூர், மண்டையூர், திருமயம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இன்று (ஜன.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பரந்தாமன்நகர், நான்கு ரதவீதிகள், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், அரசம்பட்டி, ஏனப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அரசடிபட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “ஆரோக்கியமாதா அகாடமி ” அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வாகவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் மகன் கண்ணதாசன் (56). கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தின் எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்த இவர் தில்லியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து வாகவாசல் கொண்டுவரப்பட்ட இவரது உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை 18-01-2025 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மின் சப்ளை விநியோகம் செய்யப்படும் என சிப்காட் துணை மின் நிலைய அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளத்தூர், பிடாம்பட்டி கோயில் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த 2 வயது பெண் குழந்தையின் உடலை தகவலின் பேரில் மீட்ட மண்டையூர் போலீசார் விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த காதல் திருமணம் செய்த திலோத்தமா,முனியாண்டி தம்பதிகளின் குழந்தை தர்ஷிகா (2) என்பதும் குடும்ப பிரச்சனையில் திலோத்தமா குழந்தையை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து முனியாண்டி புகாரில் போலீசார் திலோத்தமாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆலங்குடி வட்டம், வன்னியன்விடுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
குளத்தூர் வட்டம், மங்கதேவன்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அவர்கள் இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.