India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
நாகையை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 50 உதவியாளர் (Helper) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுளளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள்<
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி. இதற்கு விண்ணபிக்க ஏப்ரல் 28ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் அறிய https://pudukkottai.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யவும்
பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் நேற்று இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர், சிவகங்கையை சேர்ந்த சேவுகன் மகன் மணிகண்டன் (37) என்பதும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். தற்கொலை குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின்அருள்வாக்கின்படி தோன்றிய முத்து மாரியம்மனை வழிப்பட்டால் அனைவரது குறைகளையும் நீக்கி அருள் மாறிப் பொழிந்து அன்னை முத்துமாரி அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட அம்மை நோய் விரைவில் குணமடையும்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <
புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் FIELD SALES EXECUTIVE பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு. ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும், இதுகுறித்து மேலும் அறிய <
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தலங்களில் இந்த விராலிமலை முருகன் கோயிலும் ஒன்று. இங்குள்ள முருகனை மற்ற நாட்களில் வணங்குவதை விட தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.