India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 30 (General Housekeeper) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25000 வரை வழங்கப்படும். 12th படித்த 25 வயது – 30 வயது வரை உள்ளவர்கள், இந்த <
தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 9445000311, 9445000924 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
புதுக்கோட்டை, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா முன்னிட்டு, கடந்த 7ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (ஏப்.19) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக, ஏப்.26ஆம் தேதி பணி நாளாக ஆக மாற்றி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 17.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்
இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் மறக்காம ஷேர் செய்யுங்கள்.
TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<
இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் முடித்த விருப்பமுள்ளோர் ஏப்.28-ஏப்.30 வரை புதுகை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04322-221220, 80722-66355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.