Pudukkottai

News March 20, 2024

புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

image

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

புதுகை: மாணவனை தாக்கிய போதை ஆசாமி- கைது

image

காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிஹரன் (13). இவர் நேற்று வயலோகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த ஹரிஹரனை அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் மது போதையில் கட்டையால் தாக்கியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ராமனை போலீசார் கைது செய்தனர்.

News March 19, 2024

புதுகை: வாக்குவாதத்தால் பிரிந்த உயிர் 

image

மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 19, 2024

உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு என கூறினார்கள்.

News March 19, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

மணப்பாறை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்.தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில
அன்னவாசல் அருகே  சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் சென்றபோது  அருகே சென்ற போது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் வசந்தகுமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் வசந்தகுமார் உயிரிழந்தார். போலீசார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உலகநாதன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News March 18, 2024

புதுகையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

image

ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டத்தில் நேற்று
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்திருப்பது- சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் நகரில் அரசியல் விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். தனியார் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கடிதம் வேண்டும். இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டும். பிரச்சார அனுமதிக்கு 48 மணி நேரம் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News March 18, 2024

புதுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா!

image

புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரக் கிளை சார்பில் எழுத்தாளர் சி.பாலையா எழுதிய ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா’ என்ற நூல் வெளியீட்டு விழா மூட்டாம்பட்டி ராஜூ தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். நானிலம் ஆசிரியர் மணிமொழி உள்ளிட்டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் அடைக்கலம் வரவேற்றார்.

News March 18, 2024

புதுக்கோட்டை அருகே 10 பேர் சிக்கினர் 

image

வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா 

image

பொன்னமராவதி அருகே கொன்னையூர் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனியில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், ஊர்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

error: Content is protected !!