India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஜோயல் (21) என்பவரின் வீட்டிற்கு சென்றதனால் ராஜ்குமாரை, ஜோயல் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் நேற்று ஜோயலை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சப் டிவிசன் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இலுப்பூர் சப் டிவிசன் பகுதிகளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள போலீசார் செல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 9-ம் தேதி புதுகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர இருக்கின்றார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் புதுகை எம்எல்ஏ முத்துராஜா வீட்டிற்கு சென்று அவரது தந்தை படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் கட்சியினரை சந்திக்கும் அவர் மாலை 7 மணிக்கு சென்னை திரும்புகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஆலங்குடி அருகே சிவசூர்யா (23), நிவாஸ் (26) என்ற 2 வாலிபர்கல் சில நாட்களுக்கு முன் கீரமங்கலத்திலிருந்து பனங்குளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிவசூர்யா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்.07) உயிரிழந்துள்ளார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பழனிவேலு (30) என்பவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணேஷ்நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல தற்கொலை எண்ணம் தொன்றினால் 104 என்ற தற்கொலை தடுப்பு மைய எண்ணிற்கு அழைக்கவும்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நாளை 06.02.2025 வியாழக்கிழமை, காலை 09.30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், இராஜேந்திரபுரம் கிராமத்தில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கலந்து கொள்ள உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய எலும்பு முனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிறுபகுதி தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்” என்றுரைக்கிறது சிலப்பதிகாரம் எனக் குறிப்பிட்டுள்ளார். SHARE IT
தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டண திருத்தம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் நீளம் 25 கிலோமீட்டர் ஆக இருக்க வேண்டும். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்க நாளை (பிப்.05) கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுகை EX படைவீரர்கள் குழந்தைகள் உதவித்தொகை பெற இம்மாதம் 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற படை வீரர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1.1.23 முதல் 31.12.24 வரை போட்டிகளில் பங்கு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.