Pudukkottai

News May 16, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டத்தில் கன மழையின் காரணமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்து துறை பணிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அவசர கட்டுபாட்டு எண் -1077 அல்லது 04322-222207 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்

News May 16, 2024

அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.16) அதி கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

புதுக்கோட்டை : 11 செ.மீ மழைப்பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மணமேல்குடியில் 11 செ.மீட்டரும், மீமிசல் பகுதியில் 5 செ.மீட்டரும், ஆவுடையார்கோயில் பகுதியில் 3செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 16, 2024

புதுக்கோட்டையில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

புதுகை: பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

image

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அகில இந்திய அளவிலான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பொன்னமராவதி கேசராபட்டி சிடி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியின் நிறுவனர் வி.எஸ்.டி.பி.எல் சிதம்பரம், பள்ளியின் தாளாளர் அன்னம் சிதம்பரம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டினர். மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த  மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

News May 15, 2024

புதுக்கோட்டை மழைப்பொழிவு விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிளானிலை, வம்பன் KVK AWS, பெருங்களூர் மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

News May 15, 2024

புதுகையில் விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுகையில் சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சட்டப்பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற இணையதளத்தில் விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் மேற்படி இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து வரும் 27ம்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுகை” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News May 15, 2024

புதுகையில் நான் முதல்வன் திட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

News May 14, 2024

விராலிமலையில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

image

கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் கடந்த சிலதினங்களாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த வேளையில் தற்போது மழை பெய்துள்ளது. வெயில் சுட்டெரித்து வந்த வேளையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

News May 14, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!