India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி படிப்பை இடையே நிறுத்திவிட்டு, மாணவா்கள் எங்கேனும் வேலைக்கு சோ்ந்திருப்பது தெரியவந்தால், அதுகுறித்து அந்தந்தப் பகுதி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா். புதுகையில் நான்கு நாட்கள் பள்ளிப் பொதுத்தோ்வுகள் குறித்து பகுப்பாய்வு அறிக்கையைக் கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.

மழையூர் அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் வினோத் (32).இவரது மனைவி செல்வி (25). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செல்வி வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுகையில் நேற்று பொதுத்தேர்வுகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தியது, மாணவர்கள் 3 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் தலைமை ஆசிரியர்கள் கோட்டாட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும். மாநில அளவில் முதல் 5 இடங்களிலும், தேர்ச்சி சதவீதத்தை 95% அளவில் உயர்த்த வேண்டும் என்றார்.

புதுக்கோட்டைக்கு தர்மபுரியில் இருந்து 20 டன் மைதா மூட்டையுடன் லாரி நேற்று வந்தது திருச்சி தேசிய நெடுஞ்சாலை களமாவூர் அருகே வந்த போது அதை ஒட்டி வந்த ஓட்டுநர் பெரியண்ணனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் பெரியண்ணன் தலையில் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புதுக்கோட்டையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் 5.6.2024, 6.6.2024 தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் ஆதார் அட்டை , படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வசம் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 10 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை புதுக்கோட்டை, இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.