Pudukkottai

News May 21, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் ஊரகப் பகுதிகள் பேரூராட்சிகள் நகராட்சி பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News May 21, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் ஊரகப் பகுதிகள் பேரூராட்சிகள் நகராட்சி பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News May 20, 2024

புதுகை: நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

புதுக்கோட்டை மழைப்பதிவு விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமயம் பகுதியில் 8 செ.மீட்டரும், பொன் அமராவதி, கரம்பக்குடி, அன்னவாசல், பெருங்களூர், வம்பன் ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பதிவாகியிருந்தது.

News May 20, 2024

புதுக்கோட்டை: கனமழைக்கு வாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

விராலிமலை பட்டாசு விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அத்திப்பள்ளம் என்ற இடத்தில் பட்டாசு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கார்த்திக் (27) என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த குடோன் உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

புதுகை: நீச்சல் போட்டியை வைத்த எம்எல்ஏ

image

புதுகை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட நீச்சல் போட்டியை இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மகாராணி ரோட்டரி சங்க புதுக்கோட்டை தலைவர் கருணை செல்வி, அரசு வழக்கறிஞர் சிவா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

News May 20, 2024

புதுக்கோட்டை:குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்; முடிவு வெளிவந்தது

image

புதுக்கோட்டை மாவட்டம் சங்கன் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரத்தில் சி பி சி ஐ டி வழக்கு பதிந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சி பி சி ஐ டி சண்முகம் என்பவரின் வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடிக்கு மாற்றி இருந்தது. மேலும் விசாரணை தொடங்கிய நிலையில் குடிநீர் தொட்டிகள் மாட்டு சாணம் கலக்கவில்லை என முடிவுகளில் தெரியவந்தது.

News May 20, 2024

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் சிறப்பு!

image

புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் என்ற அமைந்துள்ளது 106ஆவது திவ்ய தேசமான சத்திய மூர்த்தி பெருமாள் கோயில். இக்கோயில் முத்தரையர்கள் கால குடைவரைக் கோயில் எனக் கருதப்படுகிறது. இதில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் இக்கோயில் உள்ளது. 1000 முதல் 2000 ஆண்டுகள் முன் பழமையான இக்கோயிலில் பல வரலாற்றுக் கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றன.

News May 19, 2024

புதுகை மாவட்ட மீனவர்கள் கவனத்திற்கு!

image

நடப்பாண்டிற்கான தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் 19 83ன் படி மீன்பிடி தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் படகுகளை ஆய்வு செய்வது குறித்து ஜூன் ஐந்தாம் தேதி மட்டும் ஆறாம் தேதி சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.மீன்பிடி நாட்டுப் படகுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!