India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் மர்மக்காய்ச்சலால் இளம்பெண் இறந்ததையடுத்து புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பரிசோதனை,ரத்தமாதிரிகளை ஆய்வு செய்து கிராம மக்களுக்கு எந்த காய்ச்சலும் இல்லை.பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார்.

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வந்திதா பாண்டேவின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, காரையூர் மற்றும் இலுப்பூர் ஆகிய காவல் சரகத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் திருடிய 4 திருடர்களை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டையில் குளத்தூர் அருகே அமைந்துள்ள குடுமியான்மலையில் குடுமிநாதர் கோயிலும், குடைவரையும், அதனருகில் இசைக்கல்வெட்டும் உள்ளது. இதில் பழங்கால வரலாறு மற்றும் கலைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சிலவை, மாலிக் காபூரின் படையெடுப்பில் சிதிலமடைந்துள்ளன. இசைக்கல்வெட்டு கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இதன் இசை நுணுக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை (மே.31) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.இதில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, திருமயத்தில் உள்ள புகழ்பெற்ற குடைவரைக் கோயிலான சிவன்கோயிலுக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து வழிபட்டார். வழிபட வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை, திருமயம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் கண்ணனூர். முருகேசன் வரவேற்றார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். திருமயம் பகுதியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது.

திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோயில் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இன்று மலை அமித்ஷா தரிசனம் செய்தார். இதையடுத்து மீண்டும் திருச்சிக்கு வந்து மாலை 5.25 மணிக்கு தனி விமானத்தில் திருப்பதி செல்கிறார்.திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாநகராட்சி மச்சுவாடி தரை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, பால்ராஜ் பொறியாளர் முகமது இப்ராகிம் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செட்டியார் குளத்தில் நேற்று மதியம் திருச்சி தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லாக்கோட்டை பீர்முகமது மகன் நவ்பல் (19) குளிப்பதற்காக சென்றார். நீச்சல் தெரியாத அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் உயிரிழந்த நவ்பல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னவாசல் மேட்டுத்தெருவில் பொது இடத்தில் நேற்று சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யாதேவி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த குமார், நேரு, தேவா, மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த சக்கரவர்த்தி, மாணிக்கம் ஆகிய 5- பேரை போலீசார் கைது செய்தனர்

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.அப்போது அவர் மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் 18 முக்கிய அரசுத்துறைகள் ஒன்றிணைந்து மக்களின் அடிப்படைதேவைகளான குடிநீர்,சாலை,மின்சாரம் மற்றும் சுகாதாரப்பணிகளை தேக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றார்.இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.