India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அழிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.21) இரவு 10 மணி முதல் இன்று (அக்.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு கேசவன் (28) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது கந்தர்வகோட்டை சாலையில் அவருக்கு எதிரே லாரியை ஒட்டி வந்த நபர் மோதியதில் கேசவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி தேன்மொழி (26) அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி (70). இவர் அக்.19 தனது பைக்கில் பொன்னமராவதிக்கு சென்றுள்ளார். அப்போது கேசராபட்டி அருகே, பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பிய நிலையில், உலகம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஒட்டிவந்த பைக், எதிர்பாராதவிதமாக, மணி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, நேற்று முன்தினம் ஆங்காங்கே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்று சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 350-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.