India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/- க்கான காசோலையினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், இன்று(ஜூன் 24) தேரில் கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றபோது கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் மகாலிங்கம்(60) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை பல துண்டுகளாக நேற்று (ஜூன் 23) உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுகை திமுக இளைஞரணி சார்பில் இன்று (ஜூன்.23) கம்பன்நகர் பூங்காவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர் சண்முகம், நகர பொறுப்பாளர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில திமுக இளைஞரணி து.செயலாளர் இளையராஜா,மாவட்டத் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், எம்எல்ஏ முத்துராஜா, எம்பி அப்துல்லா,மாவட்ட பொருளாளர் லியாகத்அலி மேயர் திலகவதி செந்தில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையின் பேரில், ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய அரசைக் கண்டித்து நாளை 24.06.2024 புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை பல துண்டுகளாக இன்று (23-06-2024) உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து
புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் வரும் ஜூலை 27 முதல் ஆக 5 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த தகவல்கள் மற்றும் புத்தக தேவை பற்றியான விழிப்புணர்வ்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பிறப்பித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்க உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாளை (ஜூன் 24) பணிபுரிய உள்ளனர். புதுகை, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை, அண்ணாவாசல், கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பிறப்பித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்க உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரும் திங்கட்கிழமை (24-06-2024) பணிபுரிய உள்ளனர். புதுகை, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை, அண்ணாவாசல், கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற உள்ளனர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, புதுக்கோட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
Sorry, no posts matched your criteria.