Pudukkottai

News June 26, 2024

புதுகை: போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

image

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுகை, மாவட்ட காவல் துறை நடத்தும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசார இயக்கம் மற்றும் அணிவகுப்பு பேரணியை இன்று 26.06.2024-ம் தேதி பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

News June 26, 2024

அன்னவாசல் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்தார். உடன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, இருக்கை மருத்துவ அலுவலர் மரு.இந்திராணி, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News June 25, 2024

புதுகை: பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!

image

புதுகையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று மணப்பாறை, அன்னவாசல் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதி டயர் வெடித்ததில் பலத்த சத்தத்துடன் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் பயணிகளை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News June 25, 2024

புதுக்கோட்டை மாவட்ட எம்.பி-கள் இன்று பதவியேற்பு

image

புதுக்கோட்டை மாவட்ட வெற்றி வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ,மதிமுக கட்சியை சேர்ந்த துரை வைகோ, இந்திய முஸ்லீக் கட்சி நவாஸ் கனி ,ஆகியோர் இன்று நாடாளுமன்ற எம்.பி-களாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

News June 25, 2024

போராட்டத்துக்கு பானைகளுடன் வந்திருந்த அதிமுக மகளிரணி

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்டக் காவல்துறை என அனைவருக்கும் பங்கு உண்டு. தமிழக அரசின் தோல்லியால் தான் இது நடந்துள்ளது.மேலும் விசாரணைக்கு முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன்? மற்றும் மூன்று மாநில எல்லைகள் தொடா்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்.

News June 25, 2024

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(ஜூன் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் குறைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம் எனவும், அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் நேரில் ஆஜராகி மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

புதுக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள்குறை
தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(ஜூன் 24) மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் 13 ஒன்றியங்களில், பொதுமக்களிடமிருந்து 629 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு

image

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24-06-2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்வில் தரக்கட்டுப்பாடு மேலாளர் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News June 24, 2024

புதுகை: புதிய வாகனங்கள் கலெக்டர் வழங்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய அலுவலக வாகனங்களை ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 24, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் இன்று (24-06-2024) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ரம்யா தேவி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!