Pudukkottai

News June 30, 2024

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுகை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; முள்ளங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கிலம், இயற்பியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்காலிகமான இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு ஜூலை 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

நாளை வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆக. 31 வரை தீவிர வயிற்றுப்போக்குத் தடுப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தான் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.எனவே 2025ஆம் ஆண்டுக்குள் இந்த இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 10ஆக குறைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு என கூறினார்.

News June 30, 2024

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

image

முதல்வரின் முகவரித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வா் என்ற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 497 கிராம ஊராட்சிகளை இணைத்து 66 இடங்களில் ஜூலை 11 அன்று ‘மக்களுடன் முதல்வா்’திட்ட முகாம்கள் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News June 29, 2024

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

image

முதல்வரின் முகவரித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வா் என்ற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 497 கிராம ஊராட்சிகளை இணைத்து 66 இடங்களில் ஜூலை 11 அன்று ‘மக்களுடன் முதல்வா்’திட்ட முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News June 28, 2024

மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

image

புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News June 28, 2024

புதுகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

புதுகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

சனிக்கிழமை வேலை நாளை கைவிட வேண்டும் என கோரிக்கை

image

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக உள்ள எமிஸ் பதிவு தொடர்பான எந்த வேலையையும் ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது. காப்பீட்டில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். பள்ளி வேலை நாட்களை சனிக்கிழமைகளில் கூடுதல் வேலை நாளாக சேர்க்கப்பட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News June 27, 2024

விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுரை

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் சிறார் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 14 வழக்குகளில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மொர்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!