India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை மின் வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் இன்று (ஜூலை 4) காலை 10.30 மணிமுதல் பகல் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இதில், புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தின பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, தனியார் பள்ளி மாணவர்களின் மாரத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

புதுக்கோட்டையில் 7வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் மன்னர் கல்லுாரி விளையாட்டு திடலில் நடைபெறும்” என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் தொடங்க உள்ளது. இந்த வகுப்பில் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

குளத்தூா் அருகே பெரம்பூா் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொடை அளித்ததற்கான இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பெரம்பூா் ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக பிரணவ காா்த்திக் என்பவா் அளித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளா் முத்தழகன் தலைமையில் தொல்லியல் ஆா்வலா்கள் முருகபிரசாத், நாராயண மூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கற்சிலைகள், மரசிற்பங்கள் , ஓவியங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், மன்னர் காலத்து பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மணமேல்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் புதைக்கப்பட்ட நிலையில், அதன் தாடை மற்றும் எலும்புகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாசவாசல், முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மேலும், மாநகராட்சியின் பரப்பளவு 121 சதுர கி.மீ, மக்கள் தொகை 2.16 லட்சம் மற்றும் ஆண்டு வருவாயாக ரூ.64.21 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வு நடைபெறுகிறது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வில் பங்கேற்று மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெற்ற 11 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் மாறுதல் ஆணைகளை நேற்று வழங்கினார். இந்த கலந்தாய்வை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன், இருக்கைப் பணி கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.