Pudukkottai

News July 9, 2024

2 லட்சம் பேர் கலந்து கொண்ட புதுக்கோட்டை வாசிக்கிறது

image

புதுகையில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் என 2 லட்சம் பேர்
கலந்து கொண்ட ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, ராஜ்குமார், மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News July 8, 2024

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் சரமாரி கேள்வி

image

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

News July 8, 2024

சித்த, ஹோமியோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சித்த,ஹோமியோ மருத்துவா்,மருத்துவப் பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மொ்சி ரம்யா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மாதத் தொகுப்பு ஊதியம் ரூ. 34,000 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நிா்வாகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நிரப்பி, சித்த மருத்துவ அலுவலகத்தில் ஜூலை.18 க்குள் சமர்பிக்க வேண்டும்.

News July 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

News July 7, 2024

புதுக்கோட்டை வரும் முதல்வர் ஸ்டாலின்

image

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பட்தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று மதியம் வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார்

News July 6, 2024

அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்” மற்றும் 15ம் தேதி “உலக இளைஞர் திறன் நாள்” அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

ஆதரவற்ற பெண்களுக்கு பயிற்சி

image

புதுக்கோட்டையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிலும் பெண்களுக்கு சில பயிற்சி நிறுவனங்களும், சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே அரசு செயல்படுத்திடும் நலத்திட்டங்களின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

பெண்கள் வன்முறைக்கு எதிரான ஆய்வு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 5, 2024

புதுகை: ஜவுளிப்பூங்கா அமைக்க அழைப்பு

image

புதுக்கோட்டையில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ 2.50 கோடி இதில் எது குறைவானதோ அது அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. ஜுலை 18 இல் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரங்கில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 04324-299544, 7397556156 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

புதுக்கோட்டை இளைஞர்களே யூஸ் பண்ணிக்கோங்க

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் இணைந்து நடத்தும் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் 9786441417, 9445955451, 9943832324 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!