India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை அறிகுறி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று(ஜூலை.11) 20 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் வீடு வீடாக சென்று 45 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வம்பன் தைல மரக்காட்டுப்பகுதியில் இன்று (ஜூலை 11) மாலை திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ரவுடி துரையை பிடிக்கச் சென்றபோது ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மாகலிங்கத்தை அரிவளால் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் படுகாயமடைந்தார்.இதனால் ரவுடி துரையை காவல்துறையினர் சுட்டத்தில் ரவுடி உயிரிழந்தார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி (இரவு 7 மணி) வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இலுப்பூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க சென்ற இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி உள்ளிட்டோரை மினி லாரியால் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அன்னவாசல் பகுதியை சேர்ந்த சுந்தரம், சங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களை சிறைபிடித்துள்ளது. மேலும் 3 படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் காவலர்கள் சிலர் தொடர்பு வைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சப் – இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர்,ஏட்டு உள்ளிட்ட 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 52 பள்ளி மாணவ மாணவிகள் விடுதிகள், 5 கல்லூரி மாணவ மாணவிகள் விடுதிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் விடுதி என்று மொத்தம் 58 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2024-25 கல்வியாண்டில் சேர்க்கை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அனைத்து கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டு அறிக்கை படி, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் வீட்டு வரித் தொகையினை மீளப்பெறும் திட்டம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து 13 ஒன்றியங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 463 கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து உடனடியாக தீர்வுகாணத்தக்க மனுக்களுக்கு உடனடியாகவும், தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.