Pudukkottai

News September 29, 2024

இந்தியாவில் இசை கலைக்கே உயிர் மூச்சாகும் குடுமியான்மலை!

image

தமிழ்நாடு இசைக் கலைக்கு, ஏன்? இந்தியாவின் இசை கலைக்கே உயிர் மூச்சாக கருதப்படும் இசை பற்றிய கல்வெட்டு புதுகை மாவட்டம் குடுமியான் மலையில் காணப்படுகிறது. கர்நாடகா இசையின் ராகத்திற்கு “சரிகமபதநி” என்ற எழுத்து குறியீடுகளை கல்வெட்டு அறிமுகம் செய்கிறது. இங்கு காணப்படும் ராகங்கள் 7 அல்லது 8 நான் கொண்ட யாழ்- பரிவாதினி மூலம் வாசிக்கலாம் பரிவாதினி என்ற கல் வெட்டும் இங்கு உள்ளது. Way2news காலச்சுவடு தொடரும்.

News September 29, 2024

அமைச்சர் மெய்யநாதனின் இலாகா மாற்றம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் 6 அமைச்சர்களுக்கு துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த சிவ.வி. மெய்யநாதன் இலாகா மாற்றப்பட்டு தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கருத்துகளை பதிவிடவும்

News September 28, 2024

காவலரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

image

பனையபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து மறைந்த காவலர் இளங்கோவன் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது. ரூ.15.98 லட்சம் பணத்திற்கான காசோலையை இளங்கோவன் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர், உதவி செய்த சக காவலர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

News September 28, 2024

மாணவர்களை பாராட்டிய கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ பொறியியலில் சட்டம் மற்றும் பொதுவான படிப்புகளுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோர்ட் ஸ்டேக்ஸ் கோப் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

News September 28, 2024

அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்: ஆட்சியர்

image

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், மக்கள் திட்டமிடல் இயக்கம் போன்றவை குறித்து விவாதிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 28, 2024

15 வயதுநிரம்பியவரா? அறந்தாங்கிநகராட்சி அழைப்பு

image

குழந்தைபிறந்து 15 வருடங்கள் கழித்தும் பெயர்பதிவு செய்யப்படாதவர்களுக்காக தமிழ்நாடுபிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,மேலும் ஐந்துஆண்டுகள் (01.01.2010 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி அலுவலகம் சென்றுபயனடைய அறந்தாங்கி நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 28, 2024

குறைந்த விலையில் உப்பு வழங்கிய மன்னர்

image

புதுக்கோட்டை தனியரசு சமஸ்தானம் 175 கிராமங்களில் பூமியில் கிடைக்கும் உப்பு கலந்த தண்ணீரில் இருந்து உப்பு தயாரிக்கப்பட்டது. இதற்கு மண் உப்பு (Earth salt) என்று பெயர், கடல் நீர் உப்பை விட இது வெளுப்பாக இருக்கும், விலையும் குறைவு. 1887ல் ஒரு களம் விலை 12 அணா என்பதாகும். தமிழகத்திலேயே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உப்பு வழங்கிய மன்னர் புதுக்கோட்டை மன்னர் தான். வே டூ நீயூஸ் காலச்சுவடு தொடரும்…

News September 27, 2024

இரவு நேர ரோந்து காவல் பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 27.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 27, 2024

புதுகை: முகம் சிதறிய ஆண் சடலம்

image

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே முகம் சிதறி உயிரிழந்தார். இறந்தவர் திமுக கரைவேட்டி கட்டியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 27, 2024

ஆவணத்தாங்கோட்டையில் இளைஞர் கொலை

image

அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை வடக்கிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வாஜ் மகன் இன்பசேகரன் நேற்று மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் உடலைக் கைப்பற்றிய அறந்தாங்கி போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.